கோவை செட்டிபாளையம் பகுதியில் இயங்கும் குளோபல் பாத்வேஸ் பள்ளியில் ‘ஃப்ளின் அறக்கட்டளை’ சார்பில் 13 கோடி நிதியில் 2 ஏக்கர் நிலத்தில் 28,000 சதுரடியில் கட்டப்பட்ட நவீன ‘ஃப்ளின் விளையாட்டு அரங்கம்’ திறக்கப்பட்டது.

இந்த அரங்கை நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய கூடைப்பந்து மகளிர் அணியின் முன்னாள் தலைவர் அனிதா பால்துறை, கௌரவ விருந்தினரான கலந்துகொண்ட 5 முறை தேசிய கூடைப்பந்து சாம்பியன் பட்டம் வென்ற சுகவனேஷ்வர்; ஃப்ளின் அறக்கட்டளை பிரதிநிதி டிம் ஏக்கின்; குளோபல் பாத்வேஸ் பள்ளி நிர்வாக அறங்காவலர் கமலா சாகா; பள்ளி முதல்வர் லதா, பள்ளியின் ஆலோசகர் மற்றும் குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர் மற்றும் பலர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
இந்த நவீன விளையாட்டு அரங்கத்தில், உலக தரம் கொண்ட கூடைப்பந்து உள் அரங்கம், ஓடுதளம், ஜிம்னாசியம், டேபிள் டென்னிஸ் விளையாட்டு அமைப்பு, சதுரங்கம் (செஸ்) விளையாட்டு பகுதி; உடை மாற்றும் அறை, சிற்றுண்டி வளாகம், முதலுதவி அறை ஆகியவை உள்ளன.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர் அனிதா பால்துறை பேசுகையில், கல்விக்கும் விளையாட்டுக்கும் உரிய அங்கீகாரம் அளிக்கும் பள்ளிக்கூடத்தில் இப்படிப்பட்ட ஒரு விளையாட்டு அரங்கத்தை துவக்கி வைத்ததில் மிகவும் மகிழ்ச்சி என்றார். நிச்சயமாக இந்த விளையாட்டு வளாகத்தில் திறமையான விளையாட்டு வீரர்கள் உருவாகி இப்பளிக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதில் மாணவர்கள் பெரும் திரளாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வளாகத்தை கண்டு ரசித்தனர்.