• Wed. Jul 8th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

ஜூலை 9 முதல் 12 வரை “பிளாட் 50% மெகா விற்பனை”..,

BySeenu

Jul 8, 2026

கோவை லுலு ஹைப்பர் மார்க்கெட் தனது எண்ட் ஆஃப் சீசன் எனும் மெகா விற்பனையை ஜூலை 9 ந்தேதி துவங்கி 12 ந்தேதி நடத்த உள்ளது…

இந்நிலையில் இது குறித்த குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு லுலு மாலில் நடைபெற்றது..

செய்தியாளர்கள் சந்திப்பில் லுலு ஹைப்பர் மார்க்கெட்டின் மண்டல மேலாளர் மகேசன், பொது மேலாளர் பாலாஜி, கொள்முதல் மேலாளர் சுனில் மேனன் மற்றும் சூப்பர் மார்க்கெட் மேலாளர் சின்னதுரை ஆகியோர் கலந்து கொண்டு விற்பனை சலுகைகள் மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர்.

ஜூலை 9 முதல் 12 வரை நடைபெறும் இந்த விற்பனை தினமும் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை கூடுதல் நேர வசதியுடன் நடைபெறவுள்ளது.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு பொருட்களுக்கு பிளாட் 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படுவதாகவும், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், மொபைல் போன்கள், வீட்டு உபயோக மின்சாதனங்கள், அத்தியாவசிய மளிகைப் பொருட்கள், உணவுப் பொருட்கள், சமையலறை உபகரணங்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் ஷாப்பிங் செய்ய வருபவர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் வகையில்,சிறப்பு உணவு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்..