மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அதிமுக சார்பில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் கட்சி தொண்டர்களுடன் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பரிந்துரையின் பேரில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியால் அறிவிக்கப்பட்ட வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் திருவேடகம் சிபிஆர் பெரியசாமி என்ற மணி மற்றும் மாணவர் அணி செயலாளராக நியமிக்கப்பட்ட சோழவந்தான் தெற்கு தெரு சிவா ஆகியோர் சோழவந்தான் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட 18 வார்டு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கி மரியாதை செய்யப்பட்டது அதனை தொடர்ந்து ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் பெருமாளை தரிசனம் செய்தனர்.

பின்னர் கட்சி நிர்வாகிகள் தொண்டர்களுக்கு சால்வை அணிவித்தனர் முன்னதாக சோழவந்தானிற்க்கு வருகை தந்த ஒன்றிய செயலாளர் சி பி ஆர் மணி என்ற பெரியசாமி மற்றும் மாணவரணி செயலாளர் சிவா ஆகியோருக்கு மேல தாளங்கள் மற்றும் வான வேடிக்கைகள் முழங்க அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து சோழவந்தானின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நிர்வாகிகளை சந்தித்து மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் துணைச் செயலாளர் தியாகு முன்னாள் சேர்மன் எம் கே முருகேசன் பேரூராட்சி கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன் டீக்கடை கணேசன் நிர்வாகிகள் சாந்தி மாரிமுத்து பத்தாவது வார்டு மணி ராமு பிரேம் பேட்டை பாலா தண்டபாணி பெருமாள் செழியன் சரத் சிவராஜ் விக்னேஷ் சிலம்பு மருது சேது முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமலிங்கம் பசும்பொன் நகர் மகேந்திரன் ஜூஸ் கடை கென்னடி மற்றும் 18 வார்டு செயலாளர்கள் அதிமுக சார்பு அணி நிர்வாகிகள் மகளிர் அணியினர் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.





