• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

கோத்தகிரி ஒன்றிய திமுக சார்பில் கொடியேற்று விழா…

திமுக கழக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கோத்தகிரி ஒன்றிய திமுக சார்பில் பேருந்து நிலையம் அருகில் கொடியேற்று விழா ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் கலந்துகொண்டு கழக கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.


இந்நிகழ்வில் மாநில ஆதிதிராவிடர் நலகுழு துணை செயலாளர் பொன்தோஸ், கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலர் பீமன், பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, சதக்கத்துல்லா, ராஜேந்திரன், தொரை, கோத்தகிரி பேரூர் செயலாளர் காளிதாஸ், கோத்தகிரி பஞ்சாயத்து யூனியன் தலைவர் ராம்குமார், ஊட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் மாயன், கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, மாவட்ட பிரதிநிதிகள் ஜாபர், சுசில், சண்முகம், தேனாடு ஊராட்சி தலைவர் கீழ்கோத்தகிரி ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஆல்வின், கோத்தகிரி ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் அந்தோனி, ஒன்றிய துணை அமைப்பாளர் ராம்கோபால் மற்றும் கழக நிர்வாகிகள் ஆதித்தன், சுப்பிரமணி, கில்பர்ட், சுரேஷ், கணபதி, தாமரைசெல்வன், தங்கவேல், ஜம்புலிங்கம், ருக்குமணி, விசாலாட்சி ராஜூ, பூமணி, ஜாஸ்மின், ஜெய்விக்னேஷ், வெஸ்லி உட்பட கழக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.