• Fri. Mar 20th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

திருமங்கலம் அருகே 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மீன் பிடி திருவிழா..!

ByKalamegam Viswanathan

Jul 30, 2023
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மதிப்பனூர் கிராம ஊரணியில் கடந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஊரணி வற்றியதால், இன்று காலை கிராம மக்கள் சார்பில் முடிவு எடுக்கப்பட்டு மீன் பிடிப்பது என தீர்மானித்து, கிராம பஞ்சாயத்தில் உள்ள மேட்டுப்பட்டி, மதிப்பனூர், நாகையாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் ஊரணியில் ஒரே நேரத்தில் ஒன்று திரண்டு, ஊரணியில் இறங்கி மீன் பிடித்தனர். 8 வயது சிறுவர், சிறுமி முதல் 80 வயது முதியோர் வரை மீன்பிடிப்பதில் போட்டா போட்டி போட்டுக் கொண்டு,கெளுத்தி,கட்லா,விரால், ஜிலேபி, லோகு உள்ளிட்ட வகையான மீன்களை பிடித்து சென்றனர். இதில் சிலர் வலைகளை போட்டும் மீன்களைப் பிடித்தனர்.

எட்டு ஆண்டுகளுக்கு பின்பு, கிராம மக்கள் ஒன்றிணைந்து குடும்பம், குடும்பமாக ஒரே இடத்தில், இந்த மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்ட சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.