.மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம் முன்னிட்டு மதுரை தோப்பூர் அரசு நெஞ்சுக மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
தலைமை மருத்துவர் காந்திமதிநாதன் முன்னிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரின் கரங்களால் நடப்பட்டது.
அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் கூறுகையில்,
சமீப காலங்களில் இந்த மருத்துவமனை வளாகத்தை பசுமை சூழலாக மாற்றியுள்ளதை பாராட்டும் வகையில் நாம் வழங்கிய மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் அறக்கட்டளையின் பாராட்டு சான்றிதழையும் வழங்கி வாழ்த்தினோம்.
எனது தனிப்பட்ட சேமிப்பின் மூலமாக வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மதுரையில் தொடர் பராமரிப்பு உறுதியாக உள்ள அரசு நிர்வாகம் சார்ந்த வளாகங்கள் மற்றும் அரசு பள்ளி கல்லூரிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில் இயற்கை ஆர்வலர்கள் ரமேஷ்குமார், சதீஷ்குமார் மற்றும் முகிலன் ஆகியோர் களப்பணியில் ஈடுபட்டனர்.
மருத்துவமனை தலைமை மருத்துவர் காந்திமதிநாதன் வழிகாட்டி மணிகண்டனின் சமூக சேவைகள் மற்றும் பசுமை பணிகள் குறித்து மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எடுத்துரைத்து பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.
அனைவருக்கும் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் நன்றி தெரிவித்தார்.