• Fri. Mar 20th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மீன்வளத்துறை அமைச்சரின் சொத்துக்கள் முடக்கம்!..

திமுகவில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2001- 2006-ம் ஆண்டு காலக்கட்டத்தில் அதிமுகவில் கால்நடை மற்றும் வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்தவர்!

அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ. 4.9 கோடி சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக கடந்த 2006-ம் ஆண்டு தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

அந்த வழக்கை மையமாக கொண்டு சட்டவிரோத பணபரிமாற்றம் ஏதும் நடந்துள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்திருப்பதால் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்தது.

இந்நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் 2001-2006-ம் ஆண்டு காலக்கட்டத்தின் போது 6.5 கோடி மதிப்பில் வாங்கப்பட்ட 160 ஏக்கர் கொண்ட 18 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.