• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தேர்தல் முடிந்த கையோடு அதிமுகவிற்கு முதல் அதிர்ச்சி..

தமிழகத்தில் நகர்ப்புற தேர்தல் முடிவு வந்ததும் அதிமுகவிற்கு திமுகவால் விழுந்த முதல் ஷாக் ஒன்று நடந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்தது.

இந்த தேர்தலில் தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்றில் உள்ள 12,838 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்தது,. இந்த தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வென்றது. இந்த நிலையில் மதுரை மேலூர் நகராட்சி 9ஆவது வார்டில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் அருண் சுந்தர் திமுகவில் இணைந்தார். பதிவுத் துறை அமைச்சர் பி மூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்துவிட்டார். அது போல் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் 14 ஆவது வார்டில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் திமுகவில் இணைந்தார். இவர் பால்வளத் துறை அமைச்சர் நாசர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஹிஜாப் சர்ச்சை வெடித்த மேலூர் நகராட்சி 8வது வார்டில் பாஜக படுதோல்வி அடைந்தது. அங்கு அக்கட்சி வெறும் 10 ஓட்டுகளை மட்டுமே வென்றது. மேலூர் நகராட்சி 8வது வார்டில் திமுக வேட்பாளர் முகமது யாசின் 651 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தங்களது வெற்றியை பதிவு செய்து வரும் நிலையில், மதுரை மேலூர் நகராட்சி 9-வது வார்டில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் அருண் சுந்தர பிரபு வெற்றிக்குப் பின்பு திமுகவில் இணைந்துள்ளார்.