• Wed. Apr 24th, 2024

தேனியில் நகராட்சி தலைவர் பதவியை தி.மு.க., கைப்பற்றியது

தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியை தி.மு.க., கைப்பற்றியது. போட்டியிட்ட 5 தம்பதிகளில் ஒரு தம்பதி மட்டும் (தி.மு.க.,) வாகை சூடியதால், கட்சியினரிடையே பெரும் மகிழ்ச்சி காணப்பட்டது.

தமிழகத்தில் கடந்த 19ம் தேதி, நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் தேனி மாவட்டத்தில் தேனி அல்லிநகரம் நகராட்சியில் 33 வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க.,- தி.மு.க., வினரிடையே கடும் போட்டி நிலவியது. வாக்கு பதிவு முடிந்து, மதுரை ரோடு மேரி மாதா மெட்ரிக்., பள்ளியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டன. நேற்று (பிப்.22) ஓட்டு எண்ணிக்கை நடை பெற்றது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. ஓட்டு எண்ணிக்கைக்கு 7 டேபிள்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஓட்டுப் பதிவு எண்ணிக்கையை கண்காணிக்க 20 க்கும் மேற்பட்ட ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் மூலம் ஓட்டு எண்ணப்பட்டன.
33 வார்டுகளில் பெற்றி பெற்றவர்களின் விபரம்:
1வது வார்டு- விஜயன் (தி.மு.க.,)
2வது வார்டு- சுப்புலட்சுமி (சுயே.,)
3வது வார்டு- காமாட்சியம்மாள் (அ.தி.மு.க.,)
4வது வார்டு- சதீஸ்குமார் (தி.மு.க.,)
5வது வார்டு- கிருஷ்ணபிரபா (அ.தி.மு.க.,)
6வது வார்டு- அனுசுயா (தி.மு.க.,)
7வது வார்டு- பா.செல்வி (அ.ம.மு.க.,)
8வது வார்டு- பாப்பாத்தி (அ.தி.மு.க.,)
9வது வார்டு- மணிகண்டன் (தி.மு.க.,)
10வது வார்டு- ரேணுப்பிரிய (தி.மு.க.,)
11வது வார்டு- பழனியம்மாள் (தி.மு.க.,)
12வது வார்டு- தினேஷ்குமார் (தி.மு.க.,)
13வது வார்டு- ஆனந்தி (பா.ஜ.க.,)
14வது வார்டு- நாகராஜ் (காங்.,)
15வது வார்டு- கிருஷ்ணவேணி (அ.தி.மு.க.,)
16 வது வார்டு- ராஜ்குமார் (தி.மு.க.,)
17வது வார்டு- ஜெயா (அ.ம.மு.க.,)
18வது வார்டு- சரஸ்வதி (அ.தி.மு.க.,)
19வது வார்டு- நாராயண பாண்டி (தி.மு.க.,)
20வது வார்டு- பாலமுருகன் (தி.மு.க.,)
21வது வார்டு- கிருஷ்ணகுமாரி (தி.மு.க.,)
22வது வார்டு – சற்குணம் (காங்.,)
23வது வார்டு – இந்திராகாந்தி (தி.மு.க.,)
24வது வார்டு- சங்கீதா (அ.தி.மு.க.,)
25வது வார்டு – நாகராணி (தி.மு.க.,)
26வது வார்டு- பிரிட்டிஷ் (தி.மு.க.,)
27வது வார்டு – அய்யனார் பிரபு (தி.மு.க.,)
28வது வார்டு – கோகிலா சுரேஷ் (தி.மு.க.,)
29வது வார்டு – சந்திரகலா ஈஸ்வரி (தி.மு.க.,)
30வது வார்டு – சந்திர மோகன் (சுயே.,)
31வது வார்டு – லதா (அ.தி.மு.க.,)
32வது வார்டு- வக்கீல் செல்வம் (தி.மு.க.,)
33வது வார்டு – கடவுள் (தி.மு.க.,)

33 வார்டுகளில் தி.மு.க.,- 19, அ.தி.மு.க.,- 7, அ.ம.மு.க., – 2, காங்., – 2, பா.ஜ.க.,- 1, சுயே., – 2 என வெற்றி பெற்றது.
தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியை தன் வசமாக்க போதிய வெற்றியாளர்கள் தி.மு.க., பக்கம் இருப்பதால், நினைத்தது நிறைவேறும். தி.மு.க., வின் வெற்றி தம்பதியான பாலமுருகன் ( 20 வது வார்டு) -ரேணுப்பியா (10 வது வார்டு) ஆகியோரை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வான வேடிக்கை முழங்க வரவேற்று, அவர்களுக்கு ஆளுயர மாலை அணித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். வரும் 2ம் தேதி கவுன்சிலர் பதவியேற்பு விழாவும், அதனை தொடர்ந்து பிப். 4ம் தேதி தலைவர் பதவி ஏற்பு விழாவும் நடைபெறவுள்ளது. எது எப்படியே தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியை தி.மு.க., ‘லாவகமாக’ கைப்பற்றி உள்ளது, என கூறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *