தயாரிப்பாளரும், இயக்குநருமான விவேக் குமார் கண்ணன் “Filminati Entertainment” நிறுவனத்தின் காயத்ரி சுரேஷ் மற்றும் ஸ்ரீகுருஜோதி பிலிம்ஸ் விவேகானந்தன் உடன் இணைந்து தயாரித்துள்ள படம் கொட்டேஷன் கேங். நடிகர் ஜாக்கி ஷெராஃப், சன்னி லியோன், பிரியாமணி, பேபி சாரா ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இந்த பான் இந்தியா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது
கொட்டேஷன் கேங் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரான விவேக் குமார் கண்ணன் படம் பற்றிக் கூறுகையில், ‘எங்கள் கனவுத் திரைப்படமான இந்தக் கொட்டேஷன் கேங்படத்தின் முதல் பார்வையை வெளியிடுவதில், ஒரு குழுவாக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். கடந்த வாரம்தான் திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடித்தோம். காஷ்மீர், சென்னை, ஹைதராபாத் மற்றும் மும்பையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்தின் முழு படப்பிடிப்பும் பெரும் சவாலாக இருந்தது.
ஜாக்கி ஷெராஃப், சன்னி லியோன், பிரியாமணி, பேபி சாரா மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோருடன் மற்ற காஷ்மீர் மற்றும் மும்பை நடிகர்களின் நடிப்பு படத்திற்கு மிக பெரும் பலத்தை தந்துள்ளது. இப்படம் நடிகர்களின் சிறப்பான நடிப்பையும், தொழில் நுட்பக் கலைஞர்களின் சிறந்த திறமையையும் கொண்டுள்ளது’ என்றார்