• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

சுந்தர் சி இயக்கத்தில் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியீடு..!

Byவிஷா

Jun 13, 2022

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது.
இயக்குனர் சுந்தர் சி கோலிவுட்டின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர். காமெடி திரைப்படங்கள் தான் சுந்தர் சி-யின் ஹைலைட். அவரது காமெடி படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில் தற்போது சுந்தர் சி ஜெய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் மூவரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். ஜெய் மற்றும் ஜீவா ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தை குஷ்புவின் அவ்னி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். நடிகைகள் அம்ரிதா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, மாளவிகா ஷர்மா, திவ்யதர்ஷினி, சம்யுக்தா ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது. படத்திற்கு காஃபி வித் காதல் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் படத்தின் நடிகர்கள் அனைவரும் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்கின்றனர். எனவே அசத்தலான ரொமான்ஸ் காமெடி படத்தை நாம் எதிர்பார்க்கலாம் என சினிமா வட்டாரத்தில் தெரிய வருகின்ற தகவல்களாகும்.