• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஜனவரி மாதம் சென்னையில் முதல் முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி

ByA.Tamilselvan

Oct 28, 2022

சென்னையில் வருகிற ஜனவரி மாதத்தில் முதல் முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது.
கண்காட்சியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிகள் கழகம் நடத்துகிறது. பொது நூலக இயக்குனர் இளம்பகவத், தமிழ்நாடு பாடநூல் கழக இணை இயக்குனர் சங்கர சரவணன் உள்ளிட்ட 5 பேர் குழுவினர் சமீபத்தில் ஜெர்மனி சென்று அங்கு நடந்த புத்தக கண்காட்சியை ஆய்வு செய்து அது குறித்த அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தனர். அதன் அடிப்படையில் 3 நாள் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.
30 முதல் 40 நாடுகளில் இருந்து எழுத்தாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களின் புத்தகங்களும் இடம்பெறுகின்றன. இதில் இடம்பெறும் சர்வதேச அரங்கில் வெளி நாட்டு எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களை காட்சிப்படுத்தவும், முன்னணி தமிழ் பதிப்பாளர்களை சந்திக்கவும் வாய்ப்பு வழங்கப்படும். இந்த கண்காட்சிக்கு சர்வதேச எழுத்தாளர்கள் மற்றும் நோபல் பரிசு பெற்றவர்களை கவுரவ விருந்தினர்களாக வரவழைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.