முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருத்தங்கல்லில் உள்ள அவரது இல்லத்தில் தந்தையின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அஇஅதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளராக கே.டி.ராஜேந்திர பாலாஜி இருந்து வருகிறார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகரில் அதிமுக கூட்டணி சார்பாக தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று தனது தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருத்தங்கல், பாலாஜி நகரில் உள்ள இல்லத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தந்தை K.தவசிலிங்க ஆச்சாரி அவர்களின் உருவப்படத்திற்கு மலர்தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின் போது அதிமுக தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.