• Sat. Apr 20th, 2024

வங்கதேசத்திற்கு எதிரான முதல்
டெஸ்ட்: இந்தியா பேட்டிங் தேர்வு

வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது ஸ்டேடியத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்கவீரர்களாக கே.எல்.ராகுலும், சுபம் கில்லும் ஆடிவருகின்றனர்.
இந்தியா: கேஎல் ராகுல் (கேப்டன்), சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ். வங்காளதேசம்: ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ, லிண்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிம், ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), யாசிர் அலி, நுருல் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், கலித் அகமது, எபாதத் ஹூசைன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *