• Mon. Nov 23rd, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் பிரளயநாத சிவன் கோவிலில் கார்த்திகை மாத வளர்பிறை பிரதோஷ விழா..,

ByKalamegam Viswanathan

Nov 23, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள அருள்மிகு பிரளய நாத சிவன் கோவிலில் கார்த்திகை மாத வளர்பிறை பிரதோஷ விழா நடைபெற்றது.

பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பால் தயிர் நெய் பன்னீர் சந்தனம் இளநீர் உள்ளிட்ட 21 திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது தொடர்ந்து சிவபெருமான் கோவிலின் உள்பிரபகாரங்களில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா என சிவனை வழிபட்டுச் சென்றனர் பிரதோஷ நிகழ்ச்சியில் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சியில் கோவில்
செயல் அலுவலர் ராஜா மற்றும் பூபதி உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை எம் வி எம் மணி முத்தையா வள்ளி மயில் மணி முத்தையா தொழிலதிபர் டாக்டர் மருது பாண்டியன் குடும்பத்தினர் செய்திருந்தனர் அர்ச்சகர் ரவி தலைமையில் பூஜைகள் நடைபெற்றது.