இயற்கையான பிரசவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரையில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.

தனியார் கல்லூரி நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த நடைபயணம், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தொடங்கி காந்தி நினைவு அருங்காட்சியகம் வரை நடைபெற்றது.
இதில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் மாணவர்கள் பங்கேற்று, இயற்கையான பிரசவத்தின் அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இயற்கையான பிரசவத்தின் அவசியம், தாயின் உடல்நலத்தில் அதன் முக்கியத்துவம், பிரசவ காலத்தில் தாய்மார்களுக்கு வழங்க வேண்டிய உரிய பராமரிப்பு மற்றும் மகப்பேறு தொடர்பான விழிப்புணர்வு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், ஒவ்வொரு கர்ப்பிணித் தாய்க்கும் பிரசவம் குறித்த சரியான ஆலோசனைகள் மற்றும் மருத்துவ வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில் இந்த நடைபயணம் அமைந்தது.
மருத்துவ ரீதியாக அவசியமில்லாத அறுவை சிகிச்சை பிரசவங்களைத் தவிர்த்து, தாய் மற்றும் குழந்தையின் உடல்நிலைக்கு ஏற்ற பாதுகாப்பான பிரசவ முறையைத் தேர்வு செய்வது குறித்த விழிப்புணர்வை இளம் தலைமுறையினரிடையே ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி நடைபயணம் மேற்கொண்டு, இயற்கையான பிரசவத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


