காரைக்கால் மாவட்டத்தில் நகராட்சி சார்பில் குப்பை மற்றும் சாலவங்களை சரி செய்ய தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நிறுவனம் தொடர்ந்து குப்பைகளை சரியாக சுத்தம் செய்யாமலும் சாலங்களை தூர்வாருதல் மற்றும் தூர்வாரிய சலவை மூடாமலும் இருந்து வருகிறது.

இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே திறந்து கிடந்த சாலவத்தில் ஒருவர் தவறி விழுந்து அவரை அருகில் இருந்த மக்கள் காப்பாற்றினர். இன்று காலை காரைக்கால் கூட்டுறவு பால் வழங்கும் சங்கம் எதிரே உள்ள சாலவம் திறந்து கிடந்த நிலையில் மேய்ச்சலுக்காக சாலையை கடக்க வந்த மாடு ஒன்று சாலமத்தில் தவறி விழுந்து வெளியேற முடியாமல் தவித்து வந்தது.

இதனை இதனைக் கண்டவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு மாட்டினை பத்திரமாக அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் மீட்டனர். சாலவங்களை சரியாக பராமரிக்காததாலும் திறந்து சுத்தம் செய்த சலவை சரியாக மூடாத ஆளுமே இந்த விபத்து ஏற்பட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். துரிதமாக செயல்பட்டு மாட்டினை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.






