விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா ஏழாயிரம்பண்ணை தீயணைப்பு நிலையம் சார்பில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு கீழச்செல்லையாபுரம் கல்கிடங்கில் உள்ள தண்ணீரில் எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் சிக்கினால் சிக்கியவர்களை மீட்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கியவர்கள் மற்றும் தத்தளிப்பவர்களை மீட்பது குறித்து பொது மக்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர். மேலும் நீரில் மூழ்கியவர்களை உடல் பாகத்தை பிடிக்காமல் தலை முடியை பிடித்து மீட்க முயற்சி செய்ய வேண்டும் .

பின்னர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என போலி ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளானோர் பார்வையிட்டனர்.