விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சாந்தி தலைமை வகித்தார்.

தொழிலாளர் உதவி ஆய்வாளர் துர்கா முன்னிலை வகித்தார், தலைமை ஆசிரியர் பத்மா வரவேற்று பேசினார். குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர் கவிதா மற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். குழந்தை திருமணத்தை தடுக்க மாணவியர்கள் ஒத்துழைக்க வேண்டும். போதைப் பொருளுக்கு அடிமையாகக் கூடாது, மேலும் தெரியாத நபர்கள் அழைத்தால் மாணவிகள் செல்லக்கூடாது.
பாலியல் வன்முறைகள் அதிகம் நடைபெறுவதால் மாணவிகள் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். முன்பின் தெரியாத நபர்கள் அத்துமீறலில் ஈடுபட்டால் உடனடியாக பெற்றோருக்கோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தயக்கம் இன்றி புகார் செய்ய வேண்டும். பெண் குழந்தைகள், மாணவிகளின், பாதுகாப்பு உதவி எண் 1098 பயன்படுத்தினால் உடனடியாக பாதுகாப்பு அளிப்பதுடன், நடவடிக்கை, எடுக்கப்படும் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
