• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கோவை ராஜகுரு டைல்ஸ் கடையில் தீ விபத்து

BySeenu

Feb 29, 2024

கோவை பூ மார்க்கெட் பகுதி தேவாங்கபேட் வீதியிலுள்ள ராஜகுரு டைல்ஸ் கடையில் மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்துள்ளது.
கோவை பொன்னையராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பியஸ் ஆர் தாத்தே. ராஜஸ்தானை சேர்ந்த இவர், கோவையில் பிறந்து வளர்ந்ததுள்ளர். இவர் பூமார்க்கெட் தேவாங்கபேட் வீதி 2ல் ராஜகுரு என்ற பெயரில் நான்கு மாடி கட்டிடத்தில் டைல்ஸ் மற்றும் சேனிட்டரிவேர்ஸ், சிபி பிட்டிங்க்ஸ் உள்ளிட்ட பொருட்களை கடந்த 8 வருடமாக விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை கடையை திறந்துள்ளார். அப்போது மின்கசிவு ஏற்பட்டு, தீ பரவியுள்ளது. இதனையடுத்து மின்சாரத்தை துண்டித்துள்ளார். கீழ் தளத்தில் பரவிய தீயால் சுமார் 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை தண்ணீர்கொண்டு அணைத்தனர். சிறிது நேரத்திற்கு, கீழ் தளம் மற்றும் முதல்மாடியில் இருந்து புகை வெளியேறியது. தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இதனையடுத்து ஆர் எஸ் புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்