• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

ராஜபாளையம் மலையில் தீ விபத்து.!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சஞ்சீவி மலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டதால் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராஜபாளையம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சஞ்சீவி மலை வடகிழக்கு பகுதியில் மாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்து சுமார் 3 கிலோமீட்டர் சுற்றளவுக்கு காட்டுத்தீ அதிக அளவில் பரவி மலையில் தீபம் ஏற்றியது போல் எரிந்து கொண்டிருந்தது. மேலும் மலை அடிவார பகுதியில் குடியிருப்புகள் அதிகளவில் இருப்பதால் குடியிருப்புப் பகுதியில் தீ பரவாமல் தடுக்க பொதுமக்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்திற்க்கான காரணம் குறித்து சமூக விரோதிகளா என போலீஸார் விசாரித்து வருகின்றனர். குடியிருப்புப் பகுதி அதிகமாக உள்ள பகுதி என்பதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.