• Mon. Sep 28th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

பட்ஜெட் தொடர்பாக நிதி மந்திரி
நிர்மலா சீதாராமன் ஆலோசனை

பட்ஜெட் தொடர்பாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு, பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பல்வேறு துறை பிரதிநிதிகளை அழைத்துப்பேசி ஆலோசனை நடத்துவது நிதி மந்திரியின் வழக்கம். அந்த வகையில் பட்ஜெட் தொடர்பாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று முதல் ஆலோசனை மேற்கொள்கிறார். வேளாண்மைதுறை பிரதிநிதகள், தொழிலாளர்கள் சங்க தலைவர்கள் உள்ளிட்டோருடன் இன்று ஆலோசிக்கிறார். உள் கட்டமைப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த மாதம் 28 ஆம் தேதி வரை பட்ஜெட் தொடர்பான ஆலோசனைகளை நடத்திட மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.