• Tue. Feb 18th, 2025

கண்ணாடி இழை பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு காலதாமதம்

கன்னியாகுமரி கடலில் கண்ணாடி இழை பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு
காலதாமதம் ஆகலாம் என துறை சார்ந்த அமைச்சர் மாண்புமிகு எ.வ.வேலு சூசக பேட்டியில் தெரிவித்தார்.

கன்னியாகுமரி கடலில் உள்ள திருவள்ளுவர் சிலை பாறை, சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் பாறைகளுக்கு இடையே ஆன கடல் பரப்பில் கண்ணாடி இணைப்பு பாலம் ரூ.32 கோடி நிதி ஒதுக்கீடில் வேகமாக நடைபெற்று வருகிறது.

புத்தாயிரமாண்டான 2000_ம் ஆண்டில் அன்றைய முதல்வர் கருணாநிதியால் கடற்பாறையில். திருவள்ளுவர் சிலை திறந்து வைத்ததின் 25_ம் ஆண்டு விழா பிறக்கும் 2025 புத்தாண்டு தினமான (ஜனவரி_1)ம் நாள் விழா காணயிருக்கும் நிலையில், அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக இருந்து திருவள்ளுவர் சிலை திறப்பின் 25_ வது ஆண்டை கொண்டாடுவதில் திமுக, பல்துறை தமிழ் சான்றோர்கள், திமுகவின் கூட்டணி கட்சியினர் மகிழ்ச்சியுடன் கன்னியாகுமரியில் நடக்க இருக்கும் விழாவை எதிர் பார்க்கும் நிலையில், திருவள்ளுவர் சிலை நிறுவிய 25_ம் ஆண்டு விழாவை கொண்டாடும் போது, அதற்கு சிகரம் வைத்தால் போன்று, இரண்டு பாறைகளுக்கு இடையே இருக்கும் கடல் பரப்பின் மேல்,கடல் மட்டத்திலிருந்து 7_மீட்டர் உயரத்தில்,77_மீட்டர் அகலத்தில்,சாகர் மாலை திட்டத்தின் அடிப்படையில் கண்ணாடி இழை பாலம் பணிகள் 90_சதவீதம் நிறைவடைந்திருந்தாலும் எஞ்சிய பாலத்தின் பணிகள் எப்போது நிறைவடையும் என இந்த பணியை மேற்கொண்டு இருக்கும் ஒப்பந்த நிறுவனத்திடமும், பொறியாளர்களிடம் கேட்ட போது, கால நிலை மாற்றத்தால் சில நாட்கள் பாதி நாள், சில நாள் நாள்முழுவதும் பணிகளை செய்ய முயாத நிலையில் பணிகள் தடைப்பட்டதை தெரிவித்தார்கள்.

இம்மாதத்தில் இன்னும் எஞ்சி இருக்கும் நாட்கள் 13_மட்டுமே உள்ளது. எங்களின் விருப்பம் விழா நாட்களான 30,31 தேதிகளிலே கண்ணாடி இழை பாலத்தை தமிழக முதல்வர் அண்ணன் ஸ்டாலின் திருகரத்தால் திறக்கப்பட வேண்டும் என்பதே.
இப்போது உள்ள சூழலில் குறித்த நாளில் பாலத்தின் முழுமையான பணிகள் நிறைவடையுமா? என்ற நிலையில் என அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், குமரி ஆட்சியர் அழகு மீனா, நெடுஞ்சாலை மற்றும், சென்னை IIT _யை சேர்ந்த பேராசிரியர்களும் இருந்தனர்.