• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவிலில் புனித சவேரியார் தேவாலயத்தின் திருவிழா…

.நாகர்கோவிலில் புனித சவேரியார் தேவாலயத்தின் திருவிழா. அந்த வட்டாரத்தில் உள்ள டாஸ்மாக். மது விற்பனை கடைகள்,டிசம்பர் 1 முதல்3-ம் தேதி வரை மூடல்ஆட்சியர் அறிவிப்பு. நாகர்கோவில் சவேரியார் ஆலயம் அமைந்துள்ள வட்டாரத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் டிசம்பர் 1ம் தேதி முதல் டிசம்பர் 3ம் தேதி வரை தொடர்ந்து 3 தினங்களுக்கு மூட மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சவேரியார் ஆலய வருடாந்திர விழாவை ஒட்டி அதன் வட்டாரத்தில் டிசம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடவும், ரயில்வே ரோடு, கோட்டார் சந்திப்பு, பாறைக்கால் மடையில் உள்ள டாஸ்மாக் கடைகள் ஆகியவை மூன்று தினங்கள் மூடுவதாக அவர் தெரிவித்துள்ளார்