• Sun. Apr 12th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

ஆணாக மாற பெண் போலீசுக்கு அனுமதி

Byமதி

Dec 2, 2021

மத்தியபிரதேச சேர்ந்த பெண் காவலர் ஒருவர், கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னை ஆணாக மாற்றுவதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று, காவல்துறை தலைமையகத்துக்கு மனு அளித்திருந்தார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், அந்த காவலர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, நடவடிக்கைகள் அனைத்துமே, ஆண் காவலர்கள் போன்றே இருப்பதையும், அவர் சிறு வயது முதலே பாலின அடையாள கோளாறு பாதிப்புக்கு ஆளாகி உள்ளதையும் உளவியல் ஆர்வலர்கள் கண்டறிந்து அதனை உறுதி செய்துள்ளனர்.

இதனை அடுத்து அவரின் மனுவை மத்திய பிரதேச உள்துறை அமைச்சகத்திற்கு காவல் தலைமையகம் பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் அந்த பெண் காவலர், ஆணாக மாறுவதற்கு அறுவை சிகிச்சைக்கு தற்போது அனுமதி வழங்கி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அந்த மாநிலத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்குவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.