• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

விருதுநகரைக் கலக்கும் பெண் ஆட்டோ ஓட்டுநர்..!

Byவிஷா

Mar 8, 2023

விருதுநகர் மாவட்டம், ரோசல்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவர் ஆட்டோ ஓட்டுநராக விருதுநகரையே கலக்கி வருகிறார்.
விருதுநகர் மாவட்டம் ரோசல்பட்டியில் உள்ள அரண்மனை தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. திருமணமான இவர் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கணவர் லோடுமேன் வேலை பார்த்து வரும் நிலையில், சிறுவயதில் இருந்தே தனக்கு மோட்டார் வாகனங்களின் மீதிருந்த ஆர்வம் காரணமாக ஆண்கள் ஓட்டும் கியர் பைக் போன்ற வாகனங்களை ஓட்ட கற்றுக்கொண்டார். பின்னர் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரின் உதவியோடு ஆட்டோவை ஓட்ட கற்றுக்கொண்டு, தற்போது சொந்தமாக ஆட்டோ வைத்து விருதுநகரில் பெண் ஆட்டோ ஓட்டுனராக வலம் வருகிறார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணவேணி..,
தான் ஆட்டோ ஓட்ட கற்று கொண்ட பின்னர், தனது கணவர் பக்கபலமாக இருந்து தனக்கு இந்த ஆட்டோவை வாங்கி கொடுத்து தனது ஆசையை நிறைவேற்றியதாகவும், தனது குடும்பத்தினரும் தன் மீது நம்பிக்கை வைத்து இதை செய்ய அனுமதித்தாகவும் தெரிவித்தார்.