• Wed. Apr 24th, 2024

படித்ததில் பிடித்தது

ByAlaguraja Palanichamy

Jul 10, 2022

அடால்ப் ஹிட்லர் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

ஜெர்மனி நாட்டின் மிகப் பெரிய சர்வாதிகாரி. இரண்டாம் உலகப் போரில் லட்சக் கணக்கானவர்கள் இறக்கக் காரணமானவர்.

மிருகங்கள் வதைத் தடுப்பு சட்டத்தை உலகுக்கு கொண்டு வந்தவர் இவரே!

மது அருந்தி வாகனம் ஓட்டுவதை முதலில் கண்காணிக்க ஆரம்பித்தவர்.

தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை முறையை அறிமுகப்படுத்தியவர்.

பெண்களும் சிறுவர்களும் சிகரெட் புகைப்பதை தடை செய்தவர்.

கேட்போரின் மனதை ஈர்க்கும் திறமை வாய்ந்த சிறந்த பேச்சாளர், ஓவியம் வரைவதில் வல்லவர்!

ஜெர்மனி மக்களை ஒன்று சேர்த்த சிறப்பான தலைவர்.

அசைவ உணவு உண்டதில்லை எப்போதும் சைவ உணவே உண்டார் காய்கறி-பழங்கள் சாப்பிடும்படி மக்களுக்கும், படை வீரர்களுக்கும் போதித்தார்.

மது அருந்தியதில்லை, புகைப்பிடித்ததும் இல்லை.

புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ளவர். தன் வீட்டில் 6 ஆயிரம் நூல்களுடன் கூடிய நூலகமும் வைத்திருந்தார்.

நாய் வளர்ப்பதில் விருப்பமுள்ளவர்.

யூதர்களை வெறுத்த அவர் 60 லட்சம் யூதர்களை தனிக் கிடங்குகளில் அடைத்தும், விஷவாயுவாலும் சித்திரவதைப்படுத்தி கொடூரமாகக் கொன்றார்.

தன்னை எதிர்ப்போரை பிடிக்க “கெஸ்டபோ” என்னும் ரகசிய போலீசை ஏற்படுத்தி மக்களை நடுநடுங்க வைத்தார்.

இரண்டாம் உலகப்போரின் முடிவில் தன்னுடன் தங்கி இருந்த ஈவா பிரான் என்ற தன் காதலியை சாவதற்கு சற்று முன் தான் திருமணம் செய்தார்.

பின்பு தன் காவலர்களை அழைத்து தாங்கள் இறந்த பின் சடலங்களின் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுமாறு கட்டளையிட்டார்.

ஈவா பிரானுக்கு விஷம் கொடுத்து தற்கொலை செய்ய சொல்லிவிட்டு கைத் துப்பாக்கியால் தன்னை சுட்டுக் கொண்டு இறந்தார். அவர்களின் உடல்கள் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *