• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

May 24, 2023

சிந்தனைத்துளிகள்
வாழ்க்கை பாடம் :-

ஒரு வயதான தந்தை தனது இறுதி காலத்தில் மகனை அழைத்து சொன்னார், “மகனே, இது உனது பூட்டனின் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமையானது, இதை கடைவீதிக்கு கொண்டு சென்று கைக்கடிகார கடையில்; நான் இதனை விற்கப் போகிறேன் எவ்வளவு பணம் கொடுப்பீர்கள் என்று கேட்டு வா என்றார்.
அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம், இது பழையது என்பதால் 6 டாலர்கள் மட்டுமே தர முடியும் என்று சொல்கின்றனர் என்றான்.
மீண்டும் பழைய பொருட்கள் விற்கும் கடைக்குப் சென்று கேட்டுப் பார் என்றார். அவன் போய் கேட்டு விட்டு, தந்தையிடம் இதற்கு 5000 டாலர்கள் தர முடியும் என்று சொல்கின்றனர் என்றான்.
தந்தை இதனை ம்யூஸியம் கொண்டு சென்று விலையை கேட்டுப்பார் என்றார்…
அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம், நான் அங்கு போன போது, அவர்கள் அதனை பரிசோதித்துவிட்டு என்னிடம் இதற்கான பெறுமதி ஒரு மில்லியன் டாலர்கள் என்கின்றனர் என்றான்.
தந்தை மகனை பார்த்து, மகனே! சரியான இடம் தான், உனது அந்தஸ்தை சரியாக மதிப்பிடும். எனவே, பிழையான இடத்தில் நீ உன்னை நிறுத்திவிட்டு, உன்னை மதிக்கவில்லை என்று நீ கோபப்படுவதில் அர்த்தம் இல்லை என்றார்.
“உன்னுடைய மரியாதையை அறிந்தவனே உன்னை கண்ணியப்படுத்துவான்….”
” உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே… “
இதனை வாழ்க்கையின் பாடமாக எடுத்துக்கொள்.. என்று மகனுக்கு அறிவுரை கூறினார் தந்தை.