• Mon. Oct 7th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jul 18, 2022

சிந்தனைத்துளிகள்

• எப்படி உடற்பயிற்சி உடலுக்கு அவசியமானதோ அதுபோல வாசிப்பு மனதிற்கு அவசியம்.

• மலர்களுக்கு சூரிய ஒளி எப்படியோ அதுபோல மனித நேயத்திற்கு புன்னகை.

• படித்தல் என்பது ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கான அடிப்படை கருவியாகும்.

• பளிங்கு கல் அழகிய சிற்பமாவது போல், கல்வியினால் ஆன்மா சிறப்படைகின்றது.

• எங்கு அறிவு முடிவடைகின்றதோ அங்கு மதம் தொடங்குகின்றது.

• விவாதத்தில் நிச்சயமாக வெற்றி பெற ஒரே வழிதான் உண்டு. அது விவாதங்களை தவிர்ப்பதுதான்.

• அன்பு கிடைக்கவில்லையே என்று ஏங்காதீர்கள். அன்பை கொடுக்கப் பழகுங்கள் அன்பு தானாகக் கிடைக்கும்.

• நீங்கள் எப்படியும் யோசித்தே ஆக வேண்டும், அதை ஏன் பெரிதாக யோசிக்கக்கூடாது?

• தீர்வுகளில் கவனம் செலுத்துவதே முக்கியம்; பிரச்சினைகளில் அல்ல.

• புத்திசாலித்தனமான மனிதர்கள் நல்லவர்களே. ஆனால் சிறந்தவர்கள் அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *