சிந்தனைத்துளிகள்
• நண்பர்கள் என்ற சமுத்திரத்தில் நீந்திச் செல்லுங்கள்.
அதில் நீங்கள் மூழ்கிவிட மாட்டீர்கள்..
ஏனென்றால் நட்பு என்ற படகுகள் கை கொடுக்கும்.
• நீ தேடி போகும் நட்பு அழகானது..
உன்னை தேடி வரும் நட்பு ஆழமானது..
உயிர் பிரிந்தாலும் நட்பு பிரியாது.
• உறவற்ற நிலையிலே உன் உறவாய் வருவது நட்பு..
உயிரற்ற நிலையிலே உன் உயிராய் வருவதும் நட்பு.
• நண்பனின் வார்த்தைகள் உன் தன்னம்பிக்கையின் மொழி..
தோல்வி காணும் போதெல்லாம் உன்னை துவட்டி விடும்.
• உலகம் உன்னை ஒதுக்கலாம் உறவுகள் உன்னை வெறுக்கலாம்..
உன் உயிரோடு கலந்த நட்பு மறந்தும் கூட உன்னை மறக்க நினைக்காது.
• நாம் பிறக்கும் போது நம்மோடு பிறப்பதில்லை நட்பு..
நாம் இறந்த பிறகும் அதற்கு இறப்பு இல்லை அதுவே நட்பு.
• உண்மையான நட்பு என்பது தாய் தந்தையின் மறுஉருவம்..
இறைவனும் தவமிருக்கும் வரம் அது.
• உறவு இல்லை என்றாலும் உரிமை உண்டு
கூட்டாஞ் சோற்றில் தொடங்குவது கூடவே நிற்கும் ஆயுள் வரை.
• வான் முட்டும் பாரம் ஆயினும் அசாதாரணமாக சுமக்க முடியும்
நட்பு மட்டும் உடன் இருந்தால்..
• நேரம் காலம் பார்க்காமல் உதவி செய்வது நண்பர்கள் மட்டும் தான்.