மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் மாமன்னர் மருதுபாண்டியரின் குருபூஜை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மருது சகோதரர்கள் திருவுருவப்படத்திற்கு மரியாதை செய்ய ப்பட்டது. திமுக ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் கலந்து கொண்டு மரியாதை செய்தார். இதில் அகமுடையார் சங்கத் தலைவர் கிருஷ்ணன் என்ற கிட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மார்நாட்டான் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா தெய்வேந்திரன் பொருளாளர் குமார் செல்லமுத்து முத்து இருளன் அண்ணாமலை முத்தையா அகமுடையார் உறவின்முறை அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.