• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மின்கம்பங்கள் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுத்தல்..,

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் வேடசந்தூரில் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர்களுக்கு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு செயற்பொறியாளர் பி.முத்துப்பாண்டியன் தலைமையேற்று பேசினார்.

முகாம்பில் திண்டுக்கல் மின் பகிர்மான வட்டம் பொறியாளர் கமலக்கண்ணன் பங்கேற்று மின் நுகர்வோர்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று பேசினார்.

முகாமில் உதவி செயற்பொறியாளர்கள் வேடசந்துார் சுப்பிரமணி , எரியோடு சிராமன், வடமதுரை மகேஸ்வரி, குஜிலியம்பாறை கோபாலகிருஷ்ணன் மற்றும் உதவி மின்பொறியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

குடகனாறு பாதுகாப்பு சங்கம் தலைவர் டி.ராமசாமி தலைமையில் முகாமில் வழங்கியுள்ள கோரிக்கையை மனுவில் கூறியிருப்பதாவது:

மின்சார கட்டணம் குறித்து செல்போனில் மின்சார வாரியம் சார்பில் எஸ்எம்எஸ் வருவதில் இடையூறு ஏற்பட்டதால் மின்சார கட்டணம் தெரிந்து கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

வேடசந்தூர் மற்றும் குஜிலியம்பாறை ஆகிய தாலுகாக்களில் பல இடங்களில் ஊருக்கு நடுவே மின்சார கம்பங்கள் காங்கிரீட் பூச்சு பெயர்ந்து பலத்த சேதமடைந்து உடைந்து விழும் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள மின்சார கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்சார கம்பங்கள் அமைக்க வேண்டும்.

மேலும் விவசாய நிலங்கள் வழியாக செல்லகூடிய மின்சார கம்பிகள் கைக்கு எட்டும் வகையில் தாழ்வாக செல்வதால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.