முல்லைப் பெரியாறு அணை தமிழக – கேரள எல்லையில் உள்ளது. முல்லைப் பெரியாறு அணை குறித்த பல்வேறு சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் நடிகர் ப்ரித்விராஜ் அனையை உடைக்க வேண்டும் என கூறியது பிரச்சனையாகி உள்ளது.

அணை தற்போது 140 அடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் அதிகபட்சமாக உள்ள தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிடுங்கள் என கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில்தான் நடிகர் ப்ரித்விராஜ் சர்ச்சைக்குரிய கருத்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்
அவர் தனது பதிவில் 125 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டுமே தவிர அதன் உறுதித் தன்மையை ஆய்வு செய்வது பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள விரும்பவில்லை என பதிவிட்டிருந்தார். இதையடுத்து தமிழக அரசியல்வாதிகளும் விவசாயிகளும் நடிகர் ப்ரித்விராஜின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.