• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஆர் பி உதயகுமார் தலைமையில் விவசாயிகள் போராட்டம்..,

ByKalamegam Viswanathan

Oct 1, 2025

மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி ஒன்றியத்தில் உள்ள வையூரில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் விவசாயிகள் பொதுமக்கள் ஆகியோர் பச்சைத் துண்டு அணிந்து மாபெரும் கவனஈர்ப்பு தர்ணா போராட்டம் நடத்தினர் இதுகுறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது

நாளை பல்வேறு நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள மதுரைக்கு வருகை தரும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கவனத்தில் ஈர்க்கும் வகையில் போராடி வருகிறோம் .

மதுரை மாவட்டத்தில் 10 தொகுதியில் உள்ளது இதில் திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளில் வேளாண் விளைநிலங்கள் பாதிக்கப்படும் வகையில் கனிம வளக் கொள்கைகள் நடைபெற்று வருகிறது

வேளாண் விளை நிலங்களும், நீர் நிலைகளும், நீர் வழித்தடங்களும் பாதுகாக்க வேண்டி கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க ஏற்கனவே நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் நான் தீர்மானம் கொண்டு வந்தேன்.

அப்போது துறையில் அமைச்சராக இருந்த மூத்த அமைச்சர் துரைமுருகன் கனிம வளக் கொள்கை தடுத்து நிறுத்தப்படும் என்று எடுத்துச் சொன்னார் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த முறை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கு வந்தார் அவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மதுரையில் கனிமவள கொள்கையை தடுத்து நிறுத்த வேண்டும், தரமற்ற பணிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது ராமநாதபுரம் மாவட்டம் செல்ல முதலமைச்சர் ஸ்டாலின் மதுரை வருகிறார் இதனை தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை நாங்கள் வலியுறுத்தி அதை நிறைவேற்ற வேண்டும் என்று தற்போது கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகிறோம் .

எரியும் நெருப்பில் நெய் ஊற்றுவது போல தற்பொழுது வையூர் கிராமத்தில் பட்டாசு ஆலை அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது இதனால் வேளாண் முற்றிலும் பாதிக்கப்படும்.

அதேபோல கல்லுப்பட்டி ஒன்றியத்தில் 42 ஊராட்சியில் உள்ளது இதில் மக்காச்சோளாம் பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகிறார்கள், இதில் ஏறத்தாழ 11,115 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது தற்போது பெரும் நஷ்டத்திற்கு ஏற்பட்டுள்ளது ஆகவே உடனடியாக விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்றும், அதேபோல தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் கனிம வள கொள்ளை நடைபெற்று வருகிறது இதெல்லாம் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் கடந்த 26 ம் தேதி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் வழங்கப்பட்டது .

ஆகவே பட்டாசு ஆலையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் ,மேலும் தொடர்ந்து திருமால் பகுதியில் கனிமவள கொள்ளை நடைபெற்று வருகிறது, திருமங்கலம் ஒன்றியத்தில் பல கிராமங்களில் ஒரு அனுமதியின்றி கனிமவள கொள்ளை நடைபெற்று வருகிறது ஏற்கனவே மருதங்குடி கிராமத்தில் இரண்டு வாகனம் சிறைப்பிடிக்கப்பட்டது .

மதுரைக்கு வரும் முதலமைச்சர் இந்த பிரச்சனைக்கெல்லாம் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தான் தற்பொழுது கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக இந்த பட்டாசு ஆலை மூலம் சுப்புலாபுரம் ,மீனாட்சிபுரம், சத்திரப்பட்டி ,கோபாலபுரம் முத்துலிங்கபுரம் உள்ளிட்ட ,பல்வேறு கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் மிகவும் பாதிக்கும் இதன் மூலம் 50,000 விவசாய குடும்பங்கள் பாதிக்கும்.

பட்டாசு ஆலை அமைந்தால் வேலை கிடைக்கும் என்று கூறி வருகிறார்கள் தற்போது இந்த இடத்தில் விளைநிலங்கள் உள்ளது பட்டாசு ஆலை அமைப்பதற்கு என்று சில வழிமுறைகள் உள்ளது பட்டாசு ஆலை வைக்கும் போது பாதுகாப்பாக கையாள வேண்டும் இல்லை என்றால் விபத்துக்கள் ஏற்படும்.

தற்போது இந்த பகுதியில் மானாவரி பயிர், கிணற்று பாசனம், கண்மாய் பாசனம் போன்ற பாசனம் உள்ளது என்பதை அரசு தெரிந்து கொள்ள வேண்டும் .ஆகவே மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நாங்கள் மக்களுக்காக துணை நின்று போராடுவோம் என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன் நீதிபதி எஸ் எஸ் சரவணன், கருப்பையா, மாணிக்கம், மாவட்ட பொறுப்பாளர் அப்துல் சமது, மாவட்ட கழக நிர்வாகிகள் சி‌.முருகன், வக்கீல் திருப்பதி, ஒன்றிய கழக செயலாளர்கள் ராமசாமி, அரியூர் ராதாகிருஷ்ணன், கண்ணன், பிச்சை ராஜன், செல்லம்பட்டி ராஜா, அன்பழகன், கொரியர் கணேசன், பேரூர் செயலாளர்கள் பிச்சைக்கனி, நெடுமாறன் ,நகரச் செயலாளர்கள் பூமா ராஜா, விஜயன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாவடியான் ,சுதாகரன், சுமதி சாமிநாதன், மாவட்ட அணி நிர்வாகிகள் வக்கீல் பாஸ்கரன், பேரையூர் ராமகிருஷ்ணன், சிங்கராஜ பாண்டியன், வக்கீல் துரைப்பாண்டி, சரவண பாண்டி, சிவசக்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்