

கோக்களை பகுதி கல்குவாரிக்கும் குடியிருப்புகளுக்கு இடையே ஆன
அளவிடுகள் வழங்க அதிகாரிகள் காலதாமதம் செய்ததால் விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இரவு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து DSP இமயவரம்பன் பேச்சு வார்த்தையை தொடர்ந்து வட்டாட்சியர் நில அளவீடு ஆவணங்கள் வழங்கியதை அடுத்து காத்திருப்பு போராட்டம் கை விடப்பட்டது.
திருச்செங்கோடு அருகே கோக்கலை எளையாம்பாளையம் பகுதியில் கல்குவாரி கிரசர்கள் இயங்கி வருகின்றன, சட்டத்துக்கு புறம்பாக இயங்கி வருகிறது என அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து ஓராண்டாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் வீடுகளுக்கும், குவாரிகளுக்கும் இடையேயான இடைவெளி குறித்தான அளவீடுகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன் வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி உண்ணாவிரத போராட்டத்தின் போது உறுதி அளித்த பின்னரும் நீண்ட நாட்களாக அளவீடு செய்ய கால தாமதமானதை அடுத்து கிராம மக்கள் கடந்த மாதம் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். அதனை தொடர்ந்து நில அளவீடு பணிகள் நடைபெற்று முடிந்ததை, தொடர்ந்து சுமார் 20 நாட்களுக்கு மேலாகியும் சான்றுகள் வழங்காமல் வருவாய் துறையினர் காலதாமதம் செய்ததால், தினசரி அலுவலகம் வந்து சென்ற விவசாயிகள் இன்று அளவீடுகள் வழங்க வேண்டும் என்று மாலை 4 மணி முதல் காத்திருக்கும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். டிஎஸ்பி இமயவரம்பன் நடத்திய பேச்சு வார்த்தையில் வருவாய் துறை நில அளவீடு செய்யப்பட்ட ஆவணங்கள் விவசாயிகளிடம் வழங்கப்பட்டது. காத்திருப்பு போராட்டம் செய்த 25 விவசாயிகள் மீது புகார் எழும் பட்சத்தில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நில அளவை ஆவணங்கள் கிடைக்க பெற்றதை அடுத்து விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் இரவு 11.30 மணி அளவில் கைவிடப்பட்டது.

