• Sun. May 5th, 2024

திருச்செங்கோடு அருகே உள்ள அனிமூர் பகுதியில் நாய்கள் கடித்து எட்டு ஆடுகள் பலி

ByNamakkal Anjaneyar

Feb 1, 2024

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ளது. அணிமூர் கிராமம் இந்த கிராமத்தில் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு இயங்கி வருகிறது. இதே இடத்தில் நாய்கள் கருத்தடை மையம் செயல்பட்டு வருகிறது. நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக தெருவில் திரியும் நாய்களுக்கு நகராட்சி சார்பாக கருத்தடை செய்து வருகிறார்கள். கருத்தடை செய்யப்படும் நாய்கள் எந்தப் பகுதியில் பிடிக்கப் பட்டதோ அதே பகுதியில் கொண்டு சென்று விடும்போது, இங்கிருந்து தப்பிக்கும் நாய்கள் ஊருக்குள் புகுந்து விடுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அனிமூர் அருந்ததியர் தெருவில் வசிக்கும் ரவிக்குமார் அன்பு கொடி தம்பதிகள் வளர்த்து வரும் ஆட்டுப்பட்டியில் ஆறுக்கும் மேற்பட்ட நாய்கள் புகுந்து அங்கிருந்த 16 ஆடுகளை கடித்துள்ளது. இதில் எட்டு ஆடுகள் உயிரிழந்து விட்டன மீதமுள்ள எட்டாடுகள் படுகாயத்துடன் கால்நடை மருத்துவத்துறை சிகிச்சை அளித்து வருகிறது. கருத்தடை மையத்திலிருந்து தப்பித்து ஊருக்குள் நாய்கள் புகுந்து விடுவதால் பெரும் தொல்லை ஏற்படுவதாகவும், தற்போது ஆட்டுப்பட்டியில் புகுந்து எட்டு ஆடுகளை நாய்கள் கொன்று விட்டதாகவும் இந்தப் பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து ரவிக்குமார் என்பவர் கூறும் போது எங்களது ஆட்டுப்பட்டியில் புகுந்து எட்டு ஆடுகளை நாய்கள் கொன்று விட்டன இங்கு கருத்தடை செய்யப்படும் நாய்கள் தப்பித்து வெளியே வந்து கிராமத்தில் பெரும் அட்டூழியத்தை ஏற்படுத்தி வருகிறது இதனை அரசு தக்க நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தற்போது ஆடுகளை கடித்த நாய்கள் இங்கு விளையாடும் குழந்தைகளை கடித்தால் என்ன ஆவது என்று கவலை தெரிவித்தார் இவரை தொடர்ந்து பேசிய அன்புக்கொடி கூறும்போது எட்டு ஆடுகள் இறந்து விட்டன 8 ஆண்டுகள் காயமடைந்துவிட்டன எங்கள் வாழ்வாதாரம் இந்த ஆடுகளை நம்பித்தான் உள்ளது எனவே அரசு ஏதாவது நிவாரண உதவியை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் இந்த ஆடுகள் ஆடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் அரசு கொடுத்த ஆடுகள் என்பதும் அரசு கொடுத்த நான்கு ஆடுகள் பல்கிப் பெருகி 16 ஆடுகள் என பட்டி பெருத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த கிராமத்தில் நாய்களால் அவ்வப்போது கோழிகள் ஆடுகள் கடிபட்டு வந்த நிலையில் தற்போது 8 ஆடுகள் இறந்தது அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது கிராம மக்கள் அந்த வீட்டிற்கு சென்று ஆடுகள் இறந்த துக்கம் விசாரித்து வருவது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதுகுறித்து காவல்துறையிடம் ரவிக்குமார் புகார் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *