• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் முகாம் – ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு

சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் மற்றும் ஊழியர்கள் விவசாயத்திற்கான நகை கடன், பயிர்க்கடன் தர மறுப்பதாகவும், பயிர்க் கடனை முழுமையாக தராமல் மிகக்குறைவாக தருவதால் வெளியில் வட்டிக்கு கடன் வாங்கும் சூழ்நிலை இருப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.

குறைகளை கேட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, விவசாயிகளை அலைக்கழிக்கும் வங்கி ஊழியர்களிடம் உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தது தெரியவந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.