மதுரை தத்தனேரியை அடுத்துள்ள பாக்கியநாதபுரத்தில் உள்ள காமராஜர் தெருவில் மழை காலங்களின் போது மழை நீர் தேங்கி பொதுமக்கள் வீடுகளுக்கு புகுவதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் சாலையை சீரமைக்காமல் இருந்து வருவதால் அந்த பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக சேறு நிறைந்து காணப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த சுமார் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் மழைநீரால் தேங்கியிருந்த சாலையில் நாற்றுகளை நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து இந்த பகுதியில் மழைநீர் தேங்கி சுகாதாரமற்ற முறையில் இருந்து வருவதால் கொசு உற்பத்தி மையமாக மாறி வருவதாக தெரிவித்தனர். தொடர்ந்து இந்த பகுதி முழுவதும் கொசுத்தொல்லை அதிகரிப்பால் குழந்தைகள் பெரிதும் அவதிப்படும் நிலை உருவாகி உள்ளது. எனவே சாலையை சீரமைக்கக்கோரி நாத்து நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.