


திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது.பாலாறு பொறுந்தலாறு அணை ,குதிரையாறு அணை , (67) அடி கொள்ளளவு கொண்ட வரதமா நதி அணை என மூன்று உள்ளது. அணையில் இருந்து பெரியகுளம், வீரக்குளம் ,குமாரநாயக்கன்குளம், தேவ நாயக்கன்குளம் ,சிறுநாயக்கன்குளம், சோழப்ப நாயக்கன்குளம் கலிக்க நாயக்கன் குளம் ,தட்டான் குளம் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட குளங்களுக்கு 10 ஆயிரம் ஏக்கர் அளவிலான விவசாய நிலங்களுக்கு தண்ணீர் சென்று வருகிறது.

இதை பயன்படுத்தி ஆயக்குடி பேரூராட்சி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகமும் செய்யப்படுகிறது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரதமா நதியில் இருந்து உபரி நீர் வாய்க்கால் என்ற ஒரு திட்டத்திற்கு 60 கோடி நதி ஒதுக்கபட்டு வரதமா நதி அணையில் இருந்து ஒட்டசத்திரம் தொகுதிக்கு கொண்டு செல்லும் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

பணிகள் துவங்க உள்ளநிலையில் இந்த திட்டத்திற்கு பழனி வரதாநதி நீரினை பயன்படுத்தும் விவசாயிகள் சங்கம் சார்பாக இன்று பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தங்களது பழனி பகுதியில் இருந்து ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு கொண்டு செல்லும் வரதமா நதி உபரி நீர் வாய்க்கால் திட்டத்தை கைவிடவேண்டுமென கோரியும் ,பழனியில் இருந்து 18 குளங்களுக்கு நீர் பற்றாகுறை இருப்பதாக கூறி விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

