• Sun. Apr 28th, 2024

மின் கோபுரத்தின் மீது ஏறி விவசாயி தற்கொலை

Byமதி

Nov 3, 2021

தனது நிலத்தில் பொருத்தப்பட்ட உயர்மின் கோபுரத்திற்கு முறையான இழப்பீடு பணம் கிடைக்காததால் மனமுடைந்த விவசாயி தனது நிலத்தில் பொருத்தப்பட்ட உயர் மின் கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலிங்கமலை கிராமத்தில் வசித்து வந்தவர் மணி. இவருக்கு சொந்தமான இடம் 3.5 ஏக்கர் நிலத்தின் ஒருபுறம் 100 அடி உயரம் கொண்ட 7600 வாட் மிண் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரமானது வட சென்னையில் இருந்து திருச்சி மாவட்டம் அரியலூர் பகுதிக்கு சுமார் 7600 வாட் மின்சாரத்தை விவசாய நிலங்கள் இடையே கடந்த 2019 ஆண்டு துவங்கி பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. விவசாயி மணிக்கு 10 லட்சம் இழப்பீடு தொகை வழங்க அதிகாரிகள் கூறிய நிலையில் 1லட்சம் மட்டுமே வழங்கியதாகவும், மின் கோபுரத்தில் எச்சரிக்கை பலகை வைப்பதற்காக வந்த பணியாளர்களிடம் மீதி பணத்தை கேட்டுள்ளார். அங்கே வந்தவர்கள் பணம் எல்லாம் கொடுத்து முடித்தாகிவிட்டது எனக் கூறியதால், அவர் நிலத்தின் மேலே அமைக்கப்பட்டிருந்த 100 மீட்டர் மின் கோபுரத்தில் சுமார் 80 அடி உயரம் வரை ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விவசாயி மணி இறப்பிற்கு நீதி கிடைக்கும் வரை உடலை கீழே இறக்க விடமாட்டோம் என கிராம மக்கள் போராட்டம். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வளத்தை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மேல்மலையனூர் தீயணைப்பு மீட்புப் படையினர் உயிரிழந்த விவசாயம் அணியின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *