இன்று மாலை 3 மணிக்கு காரைக்குடியில் இருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் திரைப்பட நடிகருமான விஜய் வருகிறார். என்றும் அவரை வரவேற்க புதுக்கோட்டை அருகே உள்ள கட்டியா வயல் என்ற இடத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்து விசில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் கே.எம்.ஷெரீப் தலைமையில் தொண்டர்களும் ரசிகர்களும் சாலையில் கூடியிருந்தனர். அவர்களை கட்டுப்படுத்துவதற்காக புதுக்கோட்டை டிஎஸ்பி பிருந்தா தலைமையில் போலீசாரம் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர் சற்று காலம் தாமதமாக வந்த நிலையிலும் அவர் வந்து விட்டார் என்று ரசிகர்கள் ஆரவாரத்துடன் அவரது வேலை நோக்கி ஓடினார்கள். குறிப்பிட்ட இடத்தில் வேட்பாளரின் பிரச்சார வேன் நின்றிருந்தது. அதற்குச் சற்று தூரத்தில் விஜய் வந்த வாகனம் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

அப்போது அவரைக் காண்பதற்காக ஆண்களும் பெண்களும் என ஏராளமான ரசிகர்கள் வேனை சூழ்ந்து கொண்டனர். வேனுக்குள் இருந்தபடியே அவர் கைகாட்டினாரே தவிர வேனை விட்டு இறங்கவும் இல்லை. அந்த வாகனத்தில் மேற்புறத்தில் திறந்த நிலையில் இருந்த போதிலும் அதில் நின்றும் யாருக்கும் முகம் காட்ட வில்லை. அவரது ரசிகர்கள் அவருக்கு வழங்குவதற்காக பூக்களும் பொக்கேகளும் பூக்கூடைகளும் புத்தகங்களும் பரிசு பொருட்களாக வழங்குவதற்கு காத்து நின்றனர். ஆனால் எதையும் பெற்றுக் கொள்ளாமல் தனது வாகனத்திற்குள் இருந்தபடியே கைகாட்டிய படி சென்றுவிட்டார். ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் சோர்ந்து போய் திரும்பினார்கள். சிறிது நேரம் மட்டுமே வாகனம் உடனே சென்று விட்டது. வேட்பாளரை அடையாளப்படுத்துவார் என்று காத்திருந்து கடைசியில் வேட்பாளரும் ஏமாந்து விட்டார்.



