தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சாந்தனு குறித்து போட்டுள்ள ட்வீட் சர்ச்சையை கிளப்பி உள்ளது. ” பத்திரிக்கையாளர்கள் மற்றும் விமர்சகர்களை ‘தரமான செருப்படி’ என்று மறைமுகமாக கிண்டல் செய்த ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ பிட்டுப்பட நடிகர், பதிலடி தந்த சினிமா ரசிகர்கள் என பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
பீஸ்ட் படத்தை தரக்குறைவாக விமர்சிப்பவர்களுக்கு எதிராக நடிகரும் பிக் பாஸ் பிரபலமுமான ஆரி பேசிய வீடியோவை ஷேர் செய்த நடிகர் சாந்தனு, “சரியா சொன்ன மச்சி” என ட்வீட் போட்டு இருந்தார். அந்த ட்வீட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் ப்ளூ சட்டை மாறன் இப்படியொரு சர்ச்சை ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.
“ஒரு படைப்பை அல்லது படைப்பாளியை பயங்கரமா விமர்சனம் செய்யுறதுக்கும் இழிவுபடுத்துவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. Hope I’m right” என மீண்டும் தனது கருத்தில் தான் மாறாமல் உள்ளேன் என்பதை நிரூபித்து ப்ளூ சட்டை மாறன் ட்வீட்டுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் சாந்தனு.
“ஒன்னு தெரியுமா மாறா? அந்த முருங்கைக்காய் சிப்ஸ் கூட நல்லாதான் இருந்துச்சு.. உன்னோட ஆன்டி இந்தியனோட ஒப்பிடும்போது!!” என ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை வெளுத்து வாங்கி வருகின்றனர். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சண்டையை விட சமீப காலமாக சினிமாக்காரர்களின் சண்டை இப்படி அதிகமாகிடுச்சே என பலரும் வேதனை அடைந்துள்ளனர்.