சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம் மற்றும் யானைகளைச் சுற்றிப் பார்க்க ஜில்லென்று பார்க்கும் விதமாக ஏசி வாகனங்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அடுத்த வண்டலூர் பூங்காவில் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த பூங்காவிற்கு வந்து உற்சாகமாக பொழுதை கழித்து வருகிறார்கள். இந்த நிலையில் வண்டலூர் பூங்காவில் சிங்க சவாரியை மேம்படுத்த நிர்வாகம் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பார்வையாளர்கள் சிங்கங்கள் மற்றும் மான்களை குளுகுளுவென்று பார்க்கும் விதமாக இரண்டு ஏசி வாகனங்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்கள் மட்டுமல்லாமல் வார நாட்களிலும் கூட பார்வையாளர்கள் பலரும் வரிசையில் நின்று பேட்டரி வாகனங்களில் சிங்கம் மற்றும் மான்களை பார்த்து செல்கிறார்கள் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.