
தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக சென்னை மண்டல வணிக வளர்ச்சி ஆலோசனை கூட்டமானது அதன் நிறுவன தலைவர் A.M. விக்கிரமராஜா தலைமையில் சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தனியார் உணவு விடுதியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமேசான், பிலிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களை போல சிறு வியாபாரிகளும் ஆன்லைனில் பொருட்களை விற்பது குறித்து வாட்ஸ்ப் செயலி மூலம் வாட்ஸ் அப் வழி வியாபாரி என்ற பெயரில் வியாபார யுக்தியை பற்றி வியபாரிகள் சங்க பேரமைப்பு சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து செய்தியாளார்கள் சந்திப்பில் பேசிய A.M விக்கிரமராஜா,
குறைந்த கட்டணத்தில் வணிகர்கள் பயன்படுத்தக் கூடிய வகையில் இந்த வாட்ஸ் அப் யுக்தியை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
நெல் போல காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் செய்வதை விட்டுவிட்டு நியாயவிலை கடைகளில் தக்காளியை விற்பனை செய்வது தமிழ்நாடு அரசுக்கு தேவையில்லாத வேலை. இதே போல காய்கறிகள் விலையேற்றம் வேளாண்மை துறை அதிகாரிகள் வணிக சங்கத்தின் நிர்வாகிகள் விவசாய சங்கத்தின் நிர்வாகிகள் இணைந்து காய்கறிகள் விலைவாசி அதிகரிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி உள்ளோம்.
திடீர் விலையேற்றத்திற்கு வியாபாரிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை பெரிய பெரிய நிறுவனங்கள் பொருட்களை பதுக்க வாய்ப்பு உள்ளது பணமும் இடமும் அவர்களிடம் தான் உள்ளது.
விளை பொருட்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்து கொண்டால் இது போன்ற தட்டுப்பாடு நிலை ஏற்படாது என்று கூறினார்.