• Mon. Dec 9th, 2024

அதி வேகமாக பரவும் ஒமைக்ரான்…ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

Byகாயத்ரி

Dec 21, 2021

கொரோனா தொற்றின் டெல்டா வகையை விட மிகவும் வேகமான பரவக் கூடியது ஒமைக்ரான். இது தடுப்பூசி திறனை குறைத்து, தடுப்பூசி செலுத்தியிருப்பவர்களையும் பாதிக்கக் கூடியதாக உள்ளதென மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான், ஒரு மாதத்திற்குள் சுமார் 100 நாடுகளுக்கு பரவியுள்ளது.


ஒமைக்ரான் தொற்று குறித்த ஆராய்ச்சியில் மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அதன் அறிகுறிகள் குறித்து ஆராய்ந்ததில், ஒமைக்ரானுக்கு பல அறிகுறிகள் இருந்தாலும், ஒரே ஒரு பொதுவான அறிகுறி இருப்பதை கண்டறிந்துள்ளனர். தொண்டை வலி ஏற்பட்டாலும் ஒமைக்ரான் பாதித்ததற்கான அறிகுறி என அவர்கள் கூறுகின்றன

ஒமைக்ரானால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போருக்கு ஆரம்ப கட்டத்தில் தொண்டை வலி பிரதானமான அறிகுறியாக இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

மேலும் தென் ஆப்பிரிக்காவில் தொண்டை வலியுடன் சேர்த்து மூக்கடைப்பும் பலருக்கு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒமைக்ரான் அறிகுறி குறித்த ஆய்வு அறிக்கையில் மூக்கு ஒழுகுதல், தலைவலி, சோர்வு (லேசான அல்லது கடுமையானது), தும்மல் மற்றும் தொண்டை புண் அல்லது வலி ஆகியவை தான் ஒமைக்ரானின் அறிகுறிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளையில் டெல்டாவுக்கும், ஒமைக்ரான் தொற்றுக்குமான அறிகுறிகள் ஒவ்வொன்றுக்கும் இடையே மாறுதல்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.