

தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகாவிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூரில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருமலையில் 10 சென்டி மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது.
தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் ஏழுமலையான் கோயில் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் அங்கு இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், கன மழையால் நடைபாதை படிக்கட்டில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
மேலே ஏறும் பக்தர்களை தள்ளும் அளவிற்கு வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பக்தர்களை பார்த்து ‘நாங்க முதல்ல இறங்குகிறோம்.., நீங்க ஓரமா நடந்து போங்க’! என்று சொல்லும்படி இந்த காட்சிகள் அமைந்துள்ளது.
