• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிப்பு..!

ByA.Tamilselvan

Jan 31, 2023

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் பிப்ரவரி 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
சென்னை அண்ணா சாலையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “விவசாய இணைப்புகளில் சுமார் 5 லட்சம் பேர் இன்னும் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. குடிசைகளுக்கான மின் இணைப்புகளிலும் பலர் இன்னும் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. இன்னும் 9 சதவீதம் பேர் மட்டுமே மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் பிப்ரவரி 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி அவகாசம் இதுதான். இதனை நுகர்வோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு மின் இணைப்புடன் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதார் எண்களை இணைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 15ம் தேதிக்கு பிறகு கால அவகாசம் வழங்கப்படாது. மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி வெற்றிகரமாக நடந்துள்ளது” என்றார்.