• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் தொடக்கம்..!

Byவிஷா

Oct 10, 2021

உலகில் முதன் முதலில் அகழாய்வு நடத்தப்பட்ட இடம் ஆதிச்சநல்லூர் ஆகும். 1876 ஆம் ஆண்டு முதன்முதலில் அகழாய்வு நடைபெற்றது. 1903-04ஆம் ஆண்டுகளில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் கடந்த 2004 – 05ம் ஆண்டு சத்தியமூர்த்தி குழுவினர் இந்த அகழாய்வை மேற்கொண்டனர். அப்போது 600 சதுர மீட்டர் அளவில் அகழாய்வு நடைபெற்றது. 160-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு, வெண்கல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய தொல்லியல் துறை சார்பில், ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அகழாய்வுப் பணி துவங்கியுள்ளது. இந்த அகழ்வாய்வு பணிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மத்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் அகழாய்வுப் பணியைத் துவக்கி வைத்தனர்.