• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

ஜனநாயக கடமையாற்றிய மாஜி அமைச்சர்கள்

ByBala

Apr 19, 2024

விருதுநகர் அதிமுக மாவட்ட செயலாளர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது வாக்கை பதிவு செய்தார்.

தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் தங்களது வாக்கினை ஆர்வத்துடன் செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி திருத்தங்கல் கலைமகள் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மக்கள் எழுச்சியோடு அதிமுக கூட்டணிக்கு வாக்களித்து வருவதாகவும் நிச்சயம் அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து, விருதுநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.