• Wed. Apr 24th, 2024

நீலகிரி-எருமாடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி நூறாவது ஆண்டு பவழ விழா

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவில் அமைந்துள்ள எருமாடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வைத்துநூறாவது ஆண்டு பவழ விழா கொண்டாட்டம்
புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் இந்த ஓராண்டு காலத்தில் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை 30 சதவீதத்திலிருந்து 67% விழுக்காடு அதிகரித்துள்ளது நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேச்சு .
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவில் அமைந்துள்ள எருமாடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 7/2/1922ம் ஆண்டு துவக்கப்பட்டு இன்று 27/02/2023 தேதியுடன் நூறாண்டு நிறைவு பெற்றுள்ளது. இதை கொண்டாடும் வகையில் இந்தப் பள்ளியில் கோலாகலமாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா தலைமையில் இப்பள்ளியில் படிக்கும் மாணவ , மாணவிகள் .முன்னாள் மாணவ, மாணவிகள் .பெற்றோர்கள் ஆசிரியர்கள் ,ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து பல்வேறு கலாச்சார இசையுடன் எருமாடு பஜார் பகுதியில் இருந்து பிரம்மாண்ட ஊர்வலம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பள்ளியின் நூற்றாண்டு நினைவு நுழைவாயிலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா கூறுகையில் :- தமிழக முதலமைச்சரின் மகத்தான திட்டமான புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் படித்த கல்லூரிகளில் மேல்படிப்புக்காக செல்லும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தும் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் இந்த ஒரே வருட காலத்தில் தாழ்த்தப்பட்ட மாணவிகள் 30 சதவீதத்தில் இருந்து 67% சதவீதமும், பிற்படுத்தப்பட்ட மாணவிகள் 45 சதவீதத்திலிருந்து 62% அளவிற்கு கல்லூரிக்கு படிக்க சென்றுள்ளதாக புள்ளி விவரம் தெரிவிப்பதாக கூறிய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா 2000ம் ஆண்டு காலமாக மறுக்கப்பட்ட கல்வியை சட்டப் புரட்சி மூலம் இன்று அனைவருக்கும் கல்வி என்ற மகத்தான திட்டத்தை அமுல்படுத்தியது திராவிட இயக்கங்கள் என்றார். ஏழை எளிய தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவ, மாணவிகள் காலை சிற்றுண்டி சாப்பிடாமல் பள்ளிகளுக்கு செல்வதாக ஒரு ஆய்வு மூலம் அறிந்த தமிழக முதலமைச்சர் மாணவ, மாணவிகளுக்கு உள்ளம் மற்றும் உடல் வளர்ச்சி அவசியம் என்பதை உணர்ந்து அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை கொண்டு வந்த மகத்தான முதல்வர் இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்தோஸ், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி, உதகை நகர மன்ற துணைத் தலைவர் ரவிக்குமார் உட்பட ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் ,பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே தமிழக முதலமைச்சர் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்த ராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொண்டு பந்தலூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கையுன்னி, சேரம்பாடி போன்ற பகுதிகளில் கழகக் கொடிகள் ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினார். இந்த நிகழ்ச்சிகளில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் காசிலிங்கம், முஸ்தபா, திராவிட மணி ,மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர்,நெல்லியாலும் நகரச் செயலாளர் சேகர், கூடலூர் ஒன்றிய செயலாளர் லியகத் அலி பரமேஸ்வரன் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *